யாழ்ப்பாணம் – அரியாலை இலந்தைகுளம் வீதியை காப்பெட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டம்
யாழ்ப்பாணம் – அரியாலை இலந்தைகுளம் வீதியை காப்பெட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டம் இன்றையதினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இலந்தைக்குளம் வீதியில் உள்ள பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவிலுக்கு முன்பாக குறித்த நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர் குரூஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இலங்கை முழுவதும் பெருந்தெருக்கள் அமைச்சின் அமைக்கப்படும் 100 வீதிகளின் கீழ் 890 மீற்றர் நீளமான இலந்தைக்குளம் வீதி 21.5மில்லியன் நிதியில் அமைக்கப்படவுள்ளது.





