பேருந்தில் திடீரென சுகவீனமடைந்த பயணி; சாரதி செய்த செயல்!
பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் திடீர் சுகவீனமடைந்த நிலையில் சாரதியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு குருநாகல் பகுதிகளுக்கிடையில் சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்துள்ளார்.
இந்நிலையில் சுகவீனமடைந்த பயணியைக் காப்பாற்றுவதற்காக உடனடியாக செயற்பட்ட சாரதி, பேருந்தை அருகிலுள்ள வைத்தியசாலைக்குத் திருப்பி பயணியை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
இந்நிலையில் பேருந்து சாரதியின் மனிதாபிமான செயலுக்கு பல்லரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.