;
Athirady Tamil News

காடை முட்டை சாலட், 155 அடி நீள மேஜை: பிரட்டனில் டிரம்புக்கு அளித்த விருந்து!

0

பிரிட்டன் சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அந்நாட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இணைந்து மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

காடை முட்டை சாலட், வென்னிலா ஐஸ்க்ரீம் மற்றும் வாட்டர்கிராஸ் பன்னா கோட்டா, கோழிக்கறி பல்லோடைன் என பெயரே வாயில் நுழையாத, பாமர மக்களால் இப்படி ஒரு உணவு இருக்கிறது என்று அறிந்திருக்கவும், வாழ்நாளில் பார்த்திடவும் முடியாத பல உணவுகள் இந்த விருந்தில் இடம்பெற்றிருந்தன.

செயின்ட் ஜார்ஜ்-ன் வின்ட்சர் காஸ்டில் மாளிகையில் இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இது ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரண்மனை என்றும் கூறப்படுகிறது.

இந்த உலகிலேயே மன்னர் வாழும் மிகப்பெரிய அரண்மனை என்று எப்போதும் வின்ட்சர் காஸ்டில் மாளிகையை அறிமுகப்படுத்துவது வழக்கம். இந்த அரண்மனை முதலாம் வில்லியம் காலத்தில் கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது.

155 அடி நீளம் கொண்ட மிகப்பெரிய மேஜையில் 139 மெழுகுவர்த்திகளுடன் ஏராளமான உணவுவகைகள் பரிமாற்றப்பட்டது. இங்கு விருந்தினர்களைக் கவனிக்க 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். இந்த மேஜையை ஒருங்கிணைக்கவும், அலங்காரம் செய்யவும் ஒரு வார காலமாக ஊழியர்கள் வேலை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேஜையின் ஒரு பக்கம், அமெரிக்க அதிபர், மன்னர் மூன்றாம் சார்லஸ், அமெரிக்க செயலர், இளவரசர் உள்ளிட்டோரும், மற்றொரு பக்கம் ராணி கமிலா, மெலினா டிரம்ப், இளவரசி வில்லியம் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

காடை முட்டை சாலட், கோழிக்கறி, வென்னிலா ஐஸ்க்ரீம், விக்டோரியா பிளம்ஸ் என இந்தியர்களுக்கு சற்று பரிச்சயமான உணவுகளும், பிரிட்டன் நாட்டின் சிறப்பு உணவுகளும் மேடையை அலங்கரித்திருந்தன.

டிரம்ப், ஆல்கஹால் எடுத்துக்கொள்வதில்லை என்றாலும், விருந்தின் பாரம்பரியம் கருதி விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. விருந்தின்போத, டிரம்பின் தேர்தல் பிரசார பாடல்கள் உள்ளிட்ட மிக புகழ்பெற்ற பல பாடல்களும் இசைக்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.