;
Athirady Tamil News

இலங்கையில் பயங்கரம்; 35 வயது மகனுக்கு எமனான தந்தை

0

கேகாலை தேவாலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில் நேற்று (19) இரவு, குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் மகனைத் தாக்கியதில், 35 வயதுடைய மகன் உயிரிழந்துள்ளார்.

கணவனின் தாக்குதலில் காயமடைந்த மனைவி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனைவி வைத்தியசாலையில்
தேவாலேகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் உயிரிழந்தவர் பட்டுவத்த, ஹெலமட பகுதியைச் சேர்ந்தவராவார்.

தந்தையால் பொல்லு ஒன்றால் தாக்கப்பட்டு கொலை இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தேவாலேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.