;
Athirady Tamil News

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் பலஸ்தீன மக்களுக்காக மகஜர் கையளிப்பு

0

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக “FREE PALESTINE” எனும் தொனிப்பொருளில் துஆ பிரார்த்தனையும் மகஜர் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (19) சம்மாந்துறை ஹிஜ்றா ஜூம்ஆ மஸ்ஜித் முன்றலில் இடம்பெற்றது.

பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான யுத்தம் இடம்பெற்று வருகின்ற நிலையில், யுத்தத்தினால் இதுவரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினரினால் கொடுக்கப்பட்ட மகஜரை வெளிப்படையாக பொதுமக்களுக்கு வாசித்துக்காட்டியதுடன், ஒன்றுகூடிய பொதுமக்கள் அனைவரும் ஹிஜ்றா ஜூம்ஆ மஸ்ஜித் முன்றலில் துஆ பிராத்தனையில் ஈடுபட்டு அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.

இதேவேளை, குறித்த மகஜரை சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபாவிடம் கையளிக்க சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உப தலைவர் அல்ஹாஜ் கே.எம்.கே.ஏ.ரம்சீன் காரியப்பர், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறா தலைவர் அல்ஹாஜ் டாக்டர் ஏ.எம்.எம்.ரஷீத், சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபைத்தலைவர் மௌலவி எம்.எல்.எச்.பசீர் மதனி, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபர் மற்றும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.