கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை
ஹெம்மாத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலவத்கம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 21 வயது இளைஞனே உயிரிழந்தவர் ஆவார். தனிப்பட்ட பிரச்சினையின் காரணமாக கொலை சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.