;
Athirady Tamil News

ஏர் இந்தியா விமானத்தில் இலங்கை வந்த குஷ் போதைப்பொருள்

0

குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள “கிரீன் சேனல்” வழியாக வெளியேற முயன்ற இருவர் இன்று (23) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் 05 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட “குஷ்” போதைப்பொருளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தொகை
பெண் சந்தேக நபர் கொழும்பைச் சேர்ந்த 29 வயதானவர் என்றும் மற்றையவர் இந்தியாவின் சென்னையில் வசிக்கும் 48 வயதானவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் தாய்லாந்தின் பொங்கொக்கில் இந்த போதைப்பொருள் தொகையை கொள்வனவு செய்து, இந்தியாவின் புது டெல்லிக்கு வந்து, அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் AI-277 ஊடாக இன்று காலை 6.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.

இதன்போது அவர்களின் 05 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 5 கிலோ 092 கிராம் “குஷ்” போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட “குஷ்” போதைப்பொருளும் அவற்றைக் கொண்டு வந்த இரண்டு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.