;
Athirady Tamil News

உயரமாக வளர சிகிச்சை பெற்ற சிறுவன் – இறுதியில் நடந்த ஷாக் சம்பவம்!

0

சிறுவன் உயரத்தை அதிகரிக்க சிகிச்சை பெற்று நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயரம் அதிகரிக்க..
சீனாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் விலையுயர்ந்த உயரம் அதிகரிக்கும் சிகிச்சையை மேற்கொண்டார். இந்த சிகிச்சையின் மூலம் அவர் 1.4 செ.மீ. உயரம் வளர்ந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இரண்டு வாரங்களுக்குள் அவர் தனது அசல் உயரத்துக்கே திரும்பியுள்ளார். 16,700 யுவான் (சுமார் ரூ.2 லட்சம்) செலவில் தனது உயரத்தை அதிகப்படுத்த சிகிச்சை பெற்றார்.

சிகிச்சை வழங்கிய நிறுவனத்தில் அவரது தந்தை புகார் அளித்தபோது, “உங்கள் மகன் சரிசெய்ய முடியாத அளவுக்கு வயதானவர்” என்று ஊழியர்கள் கூறியதாகவும், பணத்தை திருப்பித் தருவதாக உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியில் ஷாக்
இந்நிலையில் இந்த நடைமுறை முற்றிலும் அறிவியல் பூர்வமானதல்ல என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த எண்டோகிரினாலஜி நிபுணர் வு சூயன்,

இதுபோன்ற கட்டாய செயல்முறைகள் மூலம் உயரத்தை அதிகரிக்க முடியாது என்று கூறியுள்ளார். உடற்பயிற்சி, நல்ல தூக்கம் மற்றும் இயற்கையான வளர்ச்சி காரணிகளே உயரத்தை அதிகரிக்க சரியான மற்றும் நம்பகமான வழிகள் எனவும், மரபியல் காரணிகள் இதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.