;
Athirady Tamil News

அதிக கட்டணம் வசூலித்து தீர்ப்புகள் ; கணவர் தலையீட்டால் யாழ் மல்லாகம் நீதிபதி இடைநிறுத்தம்!

0

யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சுபராஜினி ஜெகநாதனின் சேவையை நீதித்துறை சேவை ஆணைகுழு கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தியுள்ளது.

வழக்கறிஞரான அவரது கணவரின் அறிவுறுத்தல்கள் மற்றும் கோரிக்கைகளின்படி அவர் பல தீர்ப்புகளை தவறாக வழங்கியதாக தெரியவந்ததை அடுத்து நீதித்துறை சேவை ஆணைகுழு இந்த முடிவை எடுத்துள்ளது.

கணவரின் அறிவுறுத்தல்கள்
அதோடு வழக்குரைஞர் அதிகப்படியான பணத்தைப் பெற்று, அவரது மனைவியை தீர்ப்புகளை வழங்க வைத்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மல்லாகம் நீதவான் வழக்கறிஞராக தனது சேவையைத் தொடங்கியபோது, ​​திருகோணமலையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்றார்.

அதன் பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் விவகாரம் காரணமாக, அவர்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு வழக்கறிஞர் நீதிபதியானார்.

அவர் நீதிபதியானதிலிருந்து, அவரது கணவர் அவர் பணியாற்றிய நீதிமன்றத்தில் ஒவ்வொரு வழக்கிலும் தலையிட்டு அவர் விரும்பிய வழியில் தீர்ப்புகளை வழங்கியதாக கூறப்படுகின்றது.

மேலும் அவர் அதிக கட்டணம் வசூலித்து தீர்ப்புகள் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. நீதித்துறை சேவை ஆணைகுழு மேலும் விசாரணைகளை நடத்த உள்ளதால் மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.