லண்டனில் சிறப்பாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு லண்டனில் சிறப்பாக இடம்பெற்றது.
தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்பவற்றின் ஏற்பாட்டில் லண்டன், டவுனிங் தெருவில் கடந்த வெள்ளிக்கிழமை கிழமை (26.09) இடம்பெற்றது.
இதன்போது அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்றதுடன், தியாக தீபம் திலீபனின் திருவுருவப் பயத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
