;
Athirady Tamil News

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி கடமையேற்பு

0

video link-https://fromsmash.com/w-aggysuiw-dt

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்சீன் பக்கீர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் வருடாந்த இடமாற்றத்திற்கமைய கம்பஹா மாவட்டத்தின் பூகொட பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பதிகாரியாக இடமாற்றம் பெற்று சென்றதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இன்று(29) புதிய பொறுப்பதிகாரியாக கேகாலை மாவட்டம் மாவனெல்லை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் லசந்த களுவாராய்ச்சி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக கடமையேற்றுக்கொண்டார்.

மேலும் கல்முனை பகுதியில் சமூக நலனுக்காக குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக சமூகத்தின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் போதை ஒழிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் புதிய பொறுப்பதிகாரி கேட்டுக்கொண்டார்.

மேற்குறித்த நிகழ்வில் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான வாஹிட் ஏ.எல்.ஏ. வாஹிட் கல்முனை தலைமையக பொலிஸ் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி நஸீர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் உத்தியொகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இத தவிர கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் புதிய பொறுப்பதிகாரியாக சுபநேரத்தில் சர்வ மதப் பிரார்த்தனையுடன் புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி பதவியேற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினை சுற்றி பார்வையிட்ட புதிய பொறுப்பதிகாரியை கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ .எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உள்ளிட்ட பொலிஸ் ஆலோசனை குழு உறுப்பினர்கள் வரவேற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.