பிலிப்பைன்ஸை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 69 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸ் நாட்டின் விசாயாஸ் மாகாணத்தில் உள்ள செபு நகரில் நேற்று இரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவில் 6.9 என்ற அளவில் பதிவானது.
இதனை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது.
நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால், அதிர்ச்சியடைந்த மக்கள் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்தனர்.
நிலநடுக்கத்தில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதில் தற்போது வரை 69 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி மார்கோஸ் ஜூனியர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பிலிப்பைன்ஸில் உள்ள இந்திய தூதரகமும் இரங்கல் தெரிவித்துள்ளது.


