கடற்பாசி உற்பத்தி ஊடாக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும் – இளங்குமரன் எம்.பி நம்பிக்கை
யாழ்ப்பாணம் , ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கடல் பாசி உற்பத்தி மூலம் அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரம் முன்னேறும் என்ற பெருநம்பிக்கை தனக்கு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்துறை பகுதியில் முன்னெடுக்கப்படும் கடற்பாசி உற்பத்தி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் லக்ஸ்மன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி கடற்பாசி உற்பத்தி தொடர்பிலான பயிற்சி பட்டறை நடைபெறவுள்ளதாகவும் , அதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் , இந்த கடற்பாசி உற்பத்தி மூலம் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இதொரு வலுவான வழியாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

