;
Athirady Tamil News

இந்தியாவிற்கு விஜயம் செய்யும் விளாடிமிர் புடின்

0

பிரதமர் நரேந்திர மோடியுடனான சிறப்பு சந்திப்பிற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் டிசம்பர் மாதத்தில் இந்தியா பயணப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உறவுகள் நெருக்கமாகி
ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மீது அமெரிக்கா தண்டனை வரிகளை விதித்த பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நெருக்கமாகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளை இந்தியா அறிவித்தது தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் புடினின் இந்த சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 5 மற்றும் 6ம் திகதிகளில் புடின் இந்தியாவில் இருப்பார் என்றே கூறப்படுகிறது. ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மீது ட்ரம்ப் நிர்வாகம் 25 சதவீத வரி விதித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில், அதன் மீது பொருளாதார அழுத்தத்தை அளிக்கும் பொருட்டே இந்த நடவடிக்கை என அமெரிக்கா விளக்கமளித்துள்ளது. ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியே பெருமளவு ஆதாரமாக உள்ளது.

பிப்ரவரி 2022 இல் ரஷ்யா தனது இராணுவத் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து உக்ரைனின் மேற்கத்திய நட்பு நாடுகள் ரஷ்யாவின் ஏற்றுமதி வருவாயைக் குறைக்க முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளன.

அதிகம் இறக்குமதி
ஆனால் ரஷ்யாவால் ஐரோப்பாவிலிருந்து இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எரிபொருள் விற்பனையை திருப்பிவிட முடிந்தது, இதனால் பல பில்லியன் டொலர் நிதி திரட்டவும் ரஷ்யாவால் முடிந்தது.

இந்தியாவும் ரஷ்யாவும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை சோவியத் சகாப்தம் முதலே முன்னெடுத்து வருகிறது. மேலும், இந்தியாவின் முன்னணி ஆயுத சப்ளையர்களில் ரஷ்யாவும் ஒன்று.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவின் எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் மாறியுள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு மத்தியில் புடின் தனது வெளிநாட்டு பயணத்தை கணிசமாகக் குறைத்துள்ளார், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைதாணையை புடின் எதிர்கொள்கிறார்.

ஆனால் இந்தியா ICC உறுப்பு நாடு இல்லை என்பதால், புடின் கைது பயம் இல்லாமல் இந்தியா விஜயத்தை மேற்கொள்ளலாம் என்றே கூறுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.