அணில் என நினைத்து தவறுதலாக சுடப்பட்ட இளைஞர்: வேட்டையின் போது நிகழ்ந்த சோகம்
அணில் என்று நினைத்து 17 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவறுதலாக சுடப்பட்ட இளைஞர்
அமெரிக்காவில் அயோவா-வில்(Iowa) வேட்டை குழுவுடன் சென்ற 17 வயதுடைய கார்சன் ரியான் என்ற இளைஞர் அவரது குழு உறுப்பினர் ஒருவரால் அணில் என்று எண்ணப்பட்ட தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவமானது அயோவாவின் பிரைட்டன்(Brighton) என்ற பகுதியில் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது கார்சன் ரியானின் தலையின் பின் பக்கத்தில் சுடப்பட்டு இருப்பதாக அயோவா இயற்கை வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டவுடன் அவர் உடனடியாக UI ஹெல்த் கேர் மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அறிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த துரதிஷ்டவசமாக சம்பவம் தற்செயலான துப்பாக்கிச்சூடு சம்பவம் என்றும் அயோவா இயற்கை வளத் துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும், கார்சன் ரியான் உயிரிழப்பு குறித்து விசாரணையை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.