கைதடி அரசினர் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற முதியோர் தின விழா
கைதடி அரசினர் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற முதியோர் தின விழா அத்தியட்சகர் இராஜமனோகரன் தலைமையில் நேற்று (04.10.2025) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் பங்குபற்றினார்கள்.
இந் நிகழ்வில் கருத்து பிரதம விருந்தினர் உரையாற்றிய அரசாங்க அதிபர், மூத்தவர்களை பராமரிப்பது எமது தலையால கடமை எனவும், அவர்கள் எங்களின் சொத்து எனவும் குறிப்பிட்டார். மேலும், மூத்தவர்கள் மகிழ்வடைந்தால் எமது வாழ்க்கை பிரகாசமாகவிருக்கும் எனவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டு, இவ் இல்லத்தில் மூத்தவர்களை பராமரிக்கும் கடமையினை சிறப்பாக ஆற்றும் அத்தியட்சகர், உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களை வாழ்த்தினார்.
இறுதியில் மூத்தவர்கள் மற்றும் சிறுவர்கள் அரசாங்க அதிபர் மற்றும் விருந்தினர்களால் கெளரவிக்கப்பட்டார்கள்.











