பிரித்தானிய இராணுவ செயற்கைக்கோள்களை குறிவைத்து தாக்கும் ரஷ்யா
பிரித்தானிய இராணுவ செயற்கைக்கோள்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்திவருகிறது.
ரஷ்யா, பிரித்தானியாவின் இராணுவ செயற்கைக்கோள்களை குறிவைத்து வாரந்தோறும் இடையூறுகளை ஏற்படுத்திவருவதாக UK Space Command தலைவர் மேஜர் ஜெனரல் பால் டெட்மன் தெரிவித்துள்ளார்.
BBC-க்கு அளித்த பேட்டியில், ரஷ்யா பூமியில் இருக்கும் அமைப்புகள் மூலம் செயற்கைகோள்களை ஜாம் செய்ய முயல்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், உக்ரைன் மீது ரஷ்யா முழுமையாக படையெடுத்ததிலிருந்து இந்த இடையூறுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் செயற்கைக்கோள் நடவடிக்கைகள்
ரஷ்யா பிரித்தானிய செயற்கைக்கோள்களுக்கு அருகில் பறந்து, அவற்றிலிருந்து தகவல்களை சேகரிக்க முயல்கிறது.
பிரித்தானிய செயற்கைக்கோள்கள் anti-jamming தொழில்நுட்பங்களை கொண்டிருந்தாலும் இடையூறுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர், ரஷ்யா ஜேர்மன் செயற்கைக்கோள்களையும் பின்தொடர்கிறது என ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
சூழ்நிலை
பிரித்தானியா 6 இராணுவ செயற்கைக்கோள்களை வைத்துள்ள நிலையில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தலா 100-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை வைத்துள்ளன.
ரஷ்யா மற்றும் சீனா இருநாடுகளும் எதிரி செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய ஆயுதங்களை சோதனை செய்துள்ளன.
ரஷ்யா, அணு ஆயுதங்களை விண்வெளியில் நிறுவும் திறனைக் கொண்டுள்ளதாக பிரித்தானியா மற்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளன.
பிரித்தானியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள்
ரஷ்யா மற்றும் சீனாவின் லேசர் தாக்குதல்களை கண்டறியும் புதிய சென்சார்களை பிரித்தானியா சோதனை செய்யவுள்ளது.
விண்வெளி மற்றும் ஏவுகணை பாதுகாப்புக்காக அதிக முதலீடு செய்ய பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
RAF Fylingdales மையம், 360 டிகிரி ரேடார் கண்காணிப்புடன், உலகளாவிய ஏவுகணை இயக்கங்களை கண்காணித்துவருகிறது.