;
Athirady Tamil News

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் – நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு?

0

மடகாஸ்கரில் நடைபெற்று வரும் Gen-Z போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது.

மடகாஸ்கரில் Gen-Z போராட்டம்
சில மாதங்களுக்கு முன்னர் Gen-Z என அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டம் காரணமாக நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்தது.

இதைத்தொடர்ந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மடகாஸ்கர் என அடுத்தடுத்து பல்வேறு நாடுகளில் Gen-Z போராட்டம் வெடித்தது.

இந்த Gen-Z போராட்டம் தற்போது மடகாஸ்கரிலும் தொடங்கியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மடகாஸ்கரில் ஜனாதிபதி Andry Rajoelina தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி தண்ணீர் மற்றும் மின் பற்றாக்குறை காரணமாக அரசு எதிராக போராட்டம் தொடங்கியது.

Gen Z Mada என்ற அமைப்பு, தொடக்கத்தில் பேஸ்புக் மற்றும் டிக்டொக் மூலம் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தது. அதன் பின்னர் சிவில் சமூகங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து அரசுக்கு எதிரான பாரிய போராட்டமாக உருவெடுத்தது.

இந்த போராட்டத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம்
போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராணுவத்தின் ஒரு பிரிவான CAPSAT பிரிவு, போராட்டக்காரர்களை பாதுகாப்பாக, தலைநகர் அன்டானானரிவோவின் மையப் பகுதியான மே 13 சதுக்கத்திற்குள் (May 13 Square) அழைத்துச் சென்றுள்ளது.

மேலும், ராணுவத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுப்பதாக CAPSAT பிரிவு அறிவித்துள்ளது. போராட்டக்காரர்களுடன் இணைந்து CAPSAT பிரிவும் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினாவை ராஜினாமா செய்ய வலியுறுத்துகிறது.

“அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணாக, சட்டவிரோதமாகவும் வலுக்கட்டாயமாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு” என ஆண்ட்ரி ராஜோலினா தெரிவித்துள்ளார்.

2009 கலகத்தின் போது, இந்த CAPSAT பிரிவே ராஜோலினாவை ஆட்சிக்குக் கொண்டுவர உதவியது.

தற்போது போராட்டக்காரர்களுடன் இந்த ராணுவ பிரிவு இணைந்துள்ள நிலையில், ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றலாம் அல்லது ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற சூழல் நிலவுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.