;
Athirady Tamil News

ஆண் துணைகளை வாடகைக்கு அமர்த்தும் பெண்கள்.. சீனாவில் வைரலாகும் ‘Kens’ கலாச்சாரம்

0

சனத்தொகையில் முதியோரை அதிகம் கொண்டுள்ள சீனாவில் , வசதிபடைத்த மற்றும் மேல், நடுத்தர குடும்பப் பெண்கள் மத்தியில் ஒரு புதிய கலாசாரம் வேகமாக பெருகிவருகிறது.

அவர்கள் வழக்கமான உறவுகளைத் தவிர்த்து, தங்கள் தேவைகளுக்காக ‘கென்ஸ்’ (Kens) என்று அழைக்கப்படும் ஆண்களை வாடகைக்கு அமர்த்தும் முறையை விரும்புகிறார்கள்.

ஆண் துணைகளை வாடகைக்கு அமர்த்தும் பெண்கள்.. சீனாவில் வைரலாகும்

‘Kens’ கலாச்சாரம்
‘கென்’ என்பது ஓர் இளமையான, அழகான ஆண் பணியாளர் போன்றவர். இது சீனப் பெண்களின் பாரம்பரியமற்ற உறவுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு சேவைத் துறையாக உருவாகியுள்ளது.

உயரமான, உடல் தகுதி கொண்ட, மென்மையான போக்கு கொண்ட கென்ஸ்கள் , சமையல், வீட்டு வேலைகள், கடைக்கு செல்லுதல், குழந்தைகளைப் பாடசாலையிலிருந்து அழைத்து வருவது போன்ற வேலைகளைச் செய்கிறார்கள்.

மேலும், ஒரு கணவனைப் போலவே பெண்களுக்கு உணர்வுபூர்வ ஆதரவாகவும் (Emotional Support) இருக்கிறார்கள். இவர்கள் பெண்களிடம் ஒருபோதும் வாதிட மாட்டார்கள்.

மேலும், சாதாரண கணவர்களைப் போல் மறுப்புக் கூறாமல் பெண்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய எப்போதும் தயாராக இருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.