;
Athirady Tamil News

நாடாளுமன்றில் விசேட பாதுகாப்பு சோதனை ; சபாநாயகர் வெளியிட்ட தகவல்

0

நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் இன்று (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அதன்படி, நவம்பர் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

முழு நாடாளுமன்றமும் பாதுகாப்பு சோதனைக்கு
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள் மற்றும் ஆடை அலுமாரிகள் உட்பட முழு நாடாளுமன்ற கட்டிடமும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார்.

இதற்கிடையில், நவம்பர் 7 வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற கட்டிடத்தின் உயர் பாதுகாப்பு பகுதிகளும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும். அன்று பொது மக்கள் பார்வையிடும் பகுதி விருந்தினர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படும் என்றும் சபாநாயகர் கூறினார்.

விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் நிதி அமைச்சினால் வழங்கப்படுவதுடன், விசேட பாதுகாப்பு திட்டம் அமுலில் இருக்கும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாரதிகளுடன் வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அன்று நாடாளுமன்ற வாகன நிறுத்துமிடம் மூடப்படும் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் வாகனங்கள் வாகன நிறுத்துமிடத்திற்கு அனுப்பப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.

இதற்கிடையில், அன்றைய தினம் விசேட போக்குவரத்துத் திட்டமும் செயல்படுத்தப்படும் என்று சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.