;
Athirady Tamil News

வரலாறு காணாத உயர்வு; கடனில் சிக்கித்தவிக்கும் அமெரிக்கர்கள்!

0

அமெரிக்காவின் தேசியக் கடன் 38 டிரில்லியன் அமெரிக்க டொலரை தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க திறைசேரி, நாட்டின் நிதி குறித்து அதன் சமீபத்திய அறிக்கையில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த கடன் தொகையின்படி, ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 111,000 அமெரிக்க டொலர் கடனுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் ஏற்கனவே பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவதானிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் தேசியக் கடனும் வரலாறு காணாத அளவில் உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.