;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் கொள்ளைச் சம்பவங்கள்

0

சுவிட்சர்லாந்தில் மீண்டும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு
AXA என்னும் காப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், கடந்த ஆண்டைவிட சுவிட்சர்லாந்தில் கொள்ளைச் சம்பவங்கள் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, பிரான்ஸ் எல்லைக்கருகிலிருக்கும் சுவிஸ் மாகாணங்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, ஜெனீவா மாகாணத்தில் ஆயிரம் வீடுகளுக்கு 8.5 கொள்ளைகள் நடந்துள்ளன.

அவற்றைத் தொடர்ந்து, Vaud மாகாணமும் Basel நகரமும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பாதிப்பின் அளவும் அதிகரித்துள்ளது. சராசரியாக கணக்கிட்டால், வீடொன்றிற்கு 7,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியில் திட்டமிட்டுக் கொள்ளையடிக்கும் கும்பல்கள் இருப்பதாக AXA எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.