;
Athirady Tamil News

விடிஞ்சா கல்யாணம்; பாத்ரூமில் சடலமாக கிடந்த மணப்பெண் – என்ன நடந்தது?

0

திருமணத்திற்கு முன் மணப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர், அத்திமஞ்சேரிபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. பொறியியல் பட்டதாரியான இவர் அரசு போட்டித் தேர்வுக்காக ஆயத்தமாகி வந்துள்ளார்.

இவருக்கு ஆந்திரா, சிந்தாலப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பி.காம். பட்டதாரியான சந்தியா என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

தொடர்ந்து திருமணத்துக்கு முதல் நாள் மணமகனின் சொந்த ஊரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் அதற்கு தயாராகும் வகையில் மணப்பெண் சந்தியா, குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் வெளியில் வராமல் இருந்துள்ளார்.

இதையடுத்து, பதறிப்போன குடும்பத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அங்கு மணமகள் சடலமாக கிடந்தார். உடனே, தகவலறிந்து விரைந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

அதில், அவரின் குடும்பத்தினர் பெண்ணுக்கு எந்தவொரு பிரச்சினையும் இருந்ததில்லை என கூறியுள்ளனர். தொடர்ந்து உயிரிழந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.