உத்தரபிரதேசத்தில் கார் – பஸ் மோதி விபத்து – 3 பேர் பலி
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டம் கேம்ப்கா பூர்வா கிராமத்தை சேர்ந்தவர் ராஜா பையா. இவர் ஐஞ்ச்வாரா கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு குடும்பத்தினருடன் ஒரு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஜான்சி-மிர்சாபூர் தேசிய நெடுஞ்சாலையில் கோக் கிராமத்திற்கு அருகே வந்தபோது கார் மீது எதிரே வந்த ஒரு அரசு பஸ் மோதியது. இதில் மோகித் (வயது 14), அவரது சகோதரர் சுபாஷ் (6), உறவினர் ரோகித் (24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்