;
Athirady Tamil News

பெண்ணின் கண்களில் பவுடர் தெளித்து கொள்ளை ; மோச செயலால் பார்வையை இழந்த பெண்

0

அநுராதபுரம், கல்னேவ பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் புகுந்த கொள்ளையன், பெண் ஒருவரின் முகத்தில் ஒருவித பவுடரை தெளித்ததால், அவர் தனது பார்வையை இழந்துள்ளார்.

பிற்பகல் நேரத்தில் பெண்ணின் முகத்தில் கொள்ளையன் ஒருவித பவுடரை தெளித்துவிட்டு, வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளார்.

இதனால் அந்தப் பெண் தற்போது தனது பார்வையை இழந்துள்ளார்.

சம்பவத்திற்கு பின்னர் பாதிக்கப்பட்ட பெண், அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பெண்ணின் கண்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து கல்னேவ பொலிஸ் நிலையத்தில் குடியிருப்பாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைய, கல்னேவ பொலிஸார் சந்தேக நபரை அடையாளம் கண்டு, அவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஹல கலங்குட்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கல்னேவ, தம்புத்தேகம, இபலோகம மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட பல பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகள் உட்பட பல இடங்களில் சந்தேக நபர் கொள்ளை மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இரவும் பகலும் சுற்றித் திரிந்த இந்தக் கொள்ளையனின் நடவடிக்கைகள் பல நாட்களாக அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன.

சந்தேக நபரிடம், ​​உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றையும் பொலிஸா் பறிமுதல் செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.