;
Athirady Tamil News

இலங்கைக்கு வருகை தந்த நடிகர் சரத்குமார்

0

தென்னிந்திய திரைப்படத்துறையின் பிரபல நடிகர் சரத்குமார், இன்று (05) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவர் இன்று முற்பகல் 11.05 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்தார்.

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அவர் 4 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சரத்குமார் நாளை கண்டி, தெல்தெனிய, உடிஸ்பத்துவ பகுதியில் உள்ள 7 நட்சத்திர விருந்தகம் ஒன்றுக்கு செல்லவுள்ளார்.

அத்துடன், கொழும்பு, காலி போன்ற பகுதிகளுக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.