;
Athirady Tamil News

‘வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது’ – அதிபர் கிம்

0

பியாங்யாங்,

சீனாவில் நடந்த உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்திக்க வாய்ப்பு கேட்டிருந்தார். அப்போது அணு ஆயுத குவிப்பை உடனடியாக கைவிடுமாறு அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என செய்திகள் வெளியாகின. இருப்பினும் டிரம்ப் உடனான பேச்சுவார்த்தையை கிம் ஜாங் அன் தடாலடியாக மறுத்து அவரை சந்திக்காமல் தவிர்த்தார்.

டிரம்ப் பேட்டி

ஆனால் கிம் தன்னை சந்திக்காமல் தவிர்த்ததாக கூறப்படும் தகவலை அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “எங்கள் சந்திப்பை அதிபர் கிம் புறக்கணிக்கவில்லை. சீனாவில் நடந்த உச்சிமாநாட்டிற்கு பல தலைவர்கள் வந்திருந்தனர். இரண்டு நாட்கள் மிகவும் பரபரப்பாக இருந்தன. அதனால் நாங்கள் சந்திக்க சரியான நேரம் அமையவில்லை. விரைவில் நாங்கள் சந்தித்துக் கொள்ளும் நேரம் வரும்” என்று தெரிவித்தார்.

அணு ஆயுத பலம்

இதனிடையே நேற்று வடகொரிய அணு ஆயுத உற்பத்தி மையத்தை கிம் ஆய்வு செய்தார். அப்போது, போர்க்கள தந்திரோபாய அணு ஆயுதங்களை மேலும் அதிகளவில் குவிக்க அவர் உத்தரவிட்டார். ஆபத்தான எதிரியான தென் கொரியாவுடன் வடகொரியா தனது எல்லையை பகிர்ந்து கொள்வதால், வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்று அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.