நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தை காலமானார். நேற்றியதினம் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலமாகும் போது அவரது வயது 67 ஆகும்.
இன்று சனிக்கிழமை (08) பிற்பகல் பொரளை Jayaratne Respect Home-இல் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அன்னாரின் திருவுடல் நாளை (09) பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.