;
Athirady Tamil News

ஓரின சேர்க்கையின் உச்சம் ; பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்

0

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் பகுதியில் 5 மாத பச்சிளம் குழந்தை தாய் மற்றும் அவரது பெண் நண்பியுடன் சேர்ந்து கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தாய் மற்றும் அவரது பெண் நண்பியுடன் இணைந்து 5 மாத பச்சிளம் குழந்தையை கொன்ற சம்பவத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஆரம்பக்கட்ட தகவலின் படி, குழந்தை பால் குடித்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்ததாகவும், பின்னர் உடனடியாக கேலமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குழந்தை இறப்பு தொடர்பாக சந்தேகம் அடைந்த குழந்தையின் தந்தை சுரேஷ், மனைவி பாரதியின் செல்போனில் உள்ள புகைப்படங்கள் மற்றும் குரல் பதிவுகளை பரிசோதித்த பிறகு மகன் உயிரிழப்பு தொடர்பாக சந்தேகம் இருப்பதாக பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

கணவன் பொலிஸாருக்கு வழங்கிய ஆதாரத்தில், குழந்தையை கொன்றதை மனைவி ஒப்புக் கொண்டது தொடர்பான ஆதாரத்தையும் வழங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

மனைவி மற்றும் நண்பி இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக உறவில் இருந்து வந்த நிலையில் குழந்தை பிறந்த பிறகு, இருவராலும் ஒன்றாக நேரம் செலவழிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.