;
Athirady Tamil News

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது

0

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரசன்ன ரணதுங்க , இன்று காலை (12) வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தரகாக பெற்ற 47.5 இலட்சம் ரூபா
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை, சுற்றுலா மேம்பாட்டு பணியகம், இலங்கை விருந்தகங்கள் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை மாநாட்டுப் பணியகம் ஆகிய நான்கு நிறுவனங்களின் ஊழியர்களுக்கான நேரடி மருத்துவக் காப்பீட்டிற்கு, சட்டவிரோதமான முறையில் ஒரு தரகு நிறுவனத்தை நியமித்து, அந்தத் தரகு நிறுவனம் மூலம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடமிருந்து ரூபா சுமார் 47.5 இலட்சம் ரூபாயை தரகாக பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தச் செயலால், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.