;
Athirady Tamil News

வவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை

0

வவுனியா மாவட்டத்தின் புதுக்குளம் பேராறு நீர்த்தேக்கத்தில் அதிகளவான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.

வவுனியா மாவட்டத்தின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் முகமாக பேராறு நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெருமளவான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றது.

இதுதொடர்பாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த இடத்திற்கு சென்றதுடன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் இது தொடர்பாக கலந்துரையாடி இருந்தார்.

மீன்களின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபடுபவதை தற்போதைக்கு தவிர்க்குமாறும்,பொதுமக்கள் குறித்த நீர்த்தேக்கத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை வாங்குவதை முற்றுமுழுதாக தவிர்க்குமாறும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன் அறிவித்துள்ளார் விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.