;
Athirady Tamil News

கோவில் உண்டியலில் காணிக்கை போட்ட பஸ் நடத்துனருக்கு நேர்ந்த துயரம்

0

திருகோணமலை , தம்பலகாமம் பாலம்போட்டாறு பகுதியை இணைக்கும் பொலிஸ் சோதனை சாவடியில் பிரதான வீதி அருகில் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை, 5ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய லலித் குமார என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தவறி விழுந்து, தலையில் காயம்
குறித்த நபர் திருகோணமலை – கந்தளாய் தனியார் பஸ் சேவையில் நடத்துனராக ஈடுபடும் நிலையில் கண்டி – திருகோணமலை வீதி பாலம்போட்டாறு பகுதியில் உள்ள கோவில் உண்டியலில் காணிக்கை போட்டு விட்டு மீண்டும் ஓடி சென்று பஸ்ஸில் ஏறிய போது தவறி விழுந்து, தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.