;
Athirady Tamil News

அமரிக்க இராணுவ வீரர்களை அவமதித்த மெலனியா டிரம்ப்!

0

அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப், வெள்ளை மாளிகையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) கல்வி தொடர்பான கூட்டத்தில் பேசியபோது, ரோபோக்கள் வந்துவிட்டன, எதிர்காலம் என்பது இனி அறிவியல் புனைகதை அல்ல என கூறியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெலனியா டிரம்பின் இந்த உரை, ஒரு குறிப்பிட்ட சூழலில் ‘ராணுவ வீரர்கள் ரோபோக்களால் மாற்றப்படுவார்கள் என்ற பொருள் பட ‘அசாதாரணமானது’ (Dystopian) என விமர்சிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 4, 2025 மெலனியா டிரம்ப், வெள்ளை மாளிகையில் நடந்த ‘செயற்கை நுண்ணறிவு கல்விக்கான பணிக்குழு’ (White House Task Force on AI Education) கூட்டத்தில் உரையாற்றினார்.

AI தொழில்நுட்பத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி
அப்போது , நாம் அதிசயமான ஒரு தருணத்தில் வாழ்கிறோம். தானியங்கி கார்கள் (self-steer) நகரங்களில் பயணிக்கின்றன; அறுவை சிகிச்சை அறையில் ரோபோக்கள் நிலையான கைகளால் வேலை செய்கின்றன.

டிரோன்கள் (Drones) போரின் எதிர்காலத்தை மறுவரையறை செய்கின்றன. இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவால் தான் இயங்குகின்றன.

ரோபோக்கள் வந்துவிட்டன. நம் எதிர்காலம் இனி அறிவியல் புனைகதை அல்ல என்று அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு (AI) நாட்டின் பாதுகாப்பு மற்றும் போரின் எதிர்காலத்தை வரையறுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தில் டிரோன்களின் பயன்பாடு குறித்தும் அவர் பேசியுள்ளார். AI வளர்ச்சியானது மிக முக்கியமான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றாலும், தலைவர்களாகவும் பெற்றோராகவும் கண்காணிப்பு வழிகாட்டுதலுடன் அதன் வளர்ச்சியை நாம் பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்கக் குழந்தைகளை AI உலகில் தயார்படுத்த, அவர் ‘ஜனாதிபதியின் செயற்கை நுண்ணறிவு சவால்’ (Presidential AI Challenge) என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

மெலனியா டிரம்ப் ராணுவ வீரர்களிடம் நேரடியாகப் பேசவில்லை என்றாலும், ராணுவம் மற்றும் தொழில்நுட்பத் துறைகள் குறித்த அவரது கருத்துகள் ‘Dystopian’ தொனியில் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

குறிப்பாக, “போரின் எதிர்காலத்தை டிரோன்கள் மறுவரையறை செய்கின்றன” என்று அவர் குறிப்பிட்டது, எதிர்காலத்தில் மனித வீரர்கள் ரோபோக்களாலும், AI அடிப்படையிலான அமைப்புகளாலும் படிப்படியாக மாற்றப்படுவார்கள் என்ற அச்சுறுத்தலை உணர்த்துவதாகப் பார்க்கப்படுகிறது.

ராணுவ வீரர்கள் மற்றும் உளவுப் பிரிவினர் மத்தியில், ‘ஆளில்லா தொழில்நுட்பங்கள் வேலையை எடுத்துக்கொள்ளும்’ என்ற கவலையை இந்த உரை தூண்டக்கூடும் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், வெள்ளை மாளிகையின் கருத்துப்படி, இந்த உரை AI தொழில்நுட்பத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி மற்றும் கல்வி முறையில் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.