குடும்பபெண்ணின் உயிரை பறித்த பேருந்து
ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றும், பஸ் ஒன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
ஹங்குரன்கெத்த – ஹலங்வங்குவ பகுதியில் நேற்று (22) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
விபத்தில் காயமடைந்தவர்கள் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பெண் ஒருவரும் இரண்டு ஆண்களும் 7 வயதான சிறுவனும் உள்ளடங்குவதாகபபொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த 45 வயதான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக ஹங்குரன்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.