;
Athirady Tamil News

பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம்

0

ஜேர்மனியில் சிரிய அகதிகளுக்கு எதிரான உணர்வு அதிகரித்துவருகிறது. மழலையர் பள்ளிகள் மற்றும் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளைக்கூட உங்கள் நாட்டுக்குப் போங்கள் எனக் கூறுவதால் அகதிகளிடையே கலக்கம் உருவாகியுள்ளது.

உங்கள் நாட்டுக்குப் போங்கள்

ஒரு காலத்தில் போருக்குத் தப்பி வந்த சிரிய அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்றார் ஜேர்மன் சேன்ஸலராக இருந்த ஏஞ்சலா மெர்க்கல்.

ஆனால், இன்றைய சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸோ, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சிக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துவருவதைத் தடுக்க, தானும் புலம்பெயர்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்.

சிரியாவில் யுத்தம் முடிந்துவிட்டது, சிரிய அகதிகள் தங்கள் நாட்டுக்குத் திரும்பலாம் என மெர்ஸ் கூறத்துவங்கியுள்ள நிலையில், தற்போது ஜேர்மன் மக்களிடையேயும் சிரிய அகதிகளுக்கு எதிரான உணர்வு அதிகரித்துவருவது தெரியவந்துள்ளது.

சொல்லப்போனால், அகதிகளுக்கு எதிரான வெறுப்பு மேலோங்குவதுபோலும் தெரிகிறது.

சிரிய அகதிகளுக்கான ஜேர்மன் கூட்டமைப்பின் தலைவரான Nahla Osman, பள்ளிகளுக்குச் செல்லும் சிரிய அகதிகளின் பிள்ளைகளிடம், நீங்கள் சிரியா நாட்டவர்கள், உங்கள் நாட்டுக்குப் போங்கள் என கூறப்படுவதாக தெரிவிக்கிறார்.

ஆகவே, பிள்ளைகள் பயந்து அரபி மொழியில் பேசக்கூட தயக்கம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.