;
Athirady Tamil News

பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்கள்: சுவிஸ் மாகாணம் ஒன்று திட்டம்

0

சுவிஸ் மாகாணமொன்று, பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்களைப் பயன்படுத்த திட்டமிட்டுவருகிறது.

பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்கள்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணம், பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்களை பயன்படுத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலால் முக்கியமான மருந்துகள் போன்ற விடயங்கள் டெலிவரி செய்யப்படுவது தாமதமாகும் நிலையில், இப்படி ட்ரோன்கள் மூலம் அவற்றை டெலிவரி செய்வதால் காலவிரயம் தவிர்க்கப்படும் என்கிறது அந்த ஆய்வு.

அத்துடன், ஹெலிகொப்டர்கள் மூலம் இந்த பொருட்களை டெலிவரி செய்ய பெரும் செலவாகும் நிலையில், ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்வதால் நேரம், பணம் என எல்லாமே மிச்சமாகும் என இத்திட்டத்தை ஆதரிப்போர் கூறுகிறார்கள்.

ஆனால், இத்திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி எல்லை கடந்து போதைப்பொருள் கடத்தல் நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் இத்திட்டத்தை விமர்சிப்பவர்கள்.

ஆனால், தாங்கள் மேற்கொண்டுள்ள ஆய்வு, தகவல்கள் கொடுப்பதற்காக மட்டுமே என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், ஜெனீவாவில் ஏற்கனவே பொலிசார் ட்ரோன்கள் மூலம் பொருட்களைக் கொண்டு செல்வதை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.