நல்லூர் பிரதேச சபை சுகாதார ஊழியர்களுக்கு மழைக்கால அங்கி வழங்கி வைப்பு
நல்லூர் பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களுக்கு மழைக்கால அங்கி (Rain coat) தவிசாளரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையில் தலைமைக்காரியாலயத்தில் வைத்து இன்றைய தினம் புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது
மழை காலம் ஆரம்பித்துள்ளமையால் ,சுகாதார ஊழியர்களில் தமது பணியினை மழையில் இருந்து தம்மை பாதுகாத்து முன்னெடுக்க ஏதுவாக மழைக்கால அங்கி வழங்கப்பட்டது.