சீரற்ற காலநிலை: நெடுந்தீவு உயர்தரப் பரீட்சை விடைத்தாள் உலங்கு வானூர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்டது
நெடுந்தீவில் இன்றைய தினம் இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் உலங்கு வானூர்தி மூலம் எடுத்து செல்லப்பட்டுள்ளது.
பரீட்சை நிறைவடைந்ததும் தினமும் கடற்படை படகு மூலம் எடுத்துச் செல்லப்படுகின்ற விடைத்தாள் இன்றையதினம் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கடல் வழியாக எடுத்துச்செல்ல முடியாமையால் விசேடமாக உலங்கு வானூர்தி மூலம் எடுத்து செல்லப்பட்டது.
நெடுந்தீவு மகா வித்தியாலத்தில் உயர்தர பரீட்சை இடம்பெற்று வருகின்ற நிலையில் வித்தியாலய மைதானத்தில் உலங்கு வானூர்தி தரையிறக்கப்பட்டு விடைத்தாள் எடுத்துச்செல்லப்பட்டது.

