23 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து!
மொனராகலை-கொழும்பு பிரதான சாலையில் கும்புக்கனையில் இன்று (27) காலை 23 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது.
எனினும் பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு, வெள்ள பாதிப்பு உள்ளிட்டவை பதிவாகி வருகின்றன.
அதேவேளை நிலவும் மோசமான வானிலை காரணமாக 31 பேர் உயிரிழந்துள்ளனர், கடந்த 48 மணி நேரத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.