;
Athirady Tamil News

உக்ரைனுக்கு பணியாற்றிய எண்மருக்கு ரஷ்யா ஆயுள் தண்டனை

0

ரஷ்ய – உக்ரைன் போரில் கிரிமியா பாலத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட 08 பேர் தீவிரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் நேற்று அவர்களுக்கு தீர்ப்பளித்துள்ளது.

குறித்த 08 பேரும் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைனின் SBU என அழைக்கப்படும் பாதுகாப்பு சேவை இந்த தாக்குதலை முன்னெடுத்தது.

அப்போது இந்த குற்றச்சாட்டின் கீழ் ரஷ்ய, உக்ரைனிய மற்றும் ஆர்மீனிய குடிமக்கள் உட்பட எட்டு பேர் தீவிரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் மேலும் ஐந்து பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். குறித்த லொறி வெடிபொருட்களை எடுத்துச் சென்றது தங்களுக்கு தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் SBU இன் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் வாசில் மாலியுக், 2023 ஆம் ஆண்டு அளித்த பேட்டியில், தானும் மற்ற இரண்டு “நம்பகமான ஊழியர்களும்” தாக்குதலைத்திட்டமிட்டதாகவும் , அவர்களுக்குத் தெரியாமல் மற்றவர்களைப் பயன்படுத்தியதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த எட்டு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பாலம் உக்ரைனுடனான போரில் கிரெம்ளின் படைகளுக்கு முக்கிய விநியோக பாதையாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.