யாழில் இருந்து சென்ற பேருந்து பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியது ; தீவிரமடையும் மீட்பு பணி
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பாரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம் – புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதால் பயணிக்க முடியாமல் வீதியின் நடுவே நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்பு பணி
சுமார் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பஸ் சுமார் ஒன்றரை மணி நேரமாக வீதியின் நடுவே நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸில் உள்ள பயணிகளை பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.