;
Athirady Tamil News

153 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை; 191 பேரை காணவில்லை; தொடரும் அச்சநிலை

0

டிட்வா புயலால் நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தற்போதைய அறிக்கையின்படி, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை 217,263 குடும்பங்களைச் சேர்ந்த 774,724 தனிநபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அறிக்கை
கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சுமார் 798 பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், 191பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ள 27,494 குடும்பங்களைச் சேர்ந்த 100,898 தனிநபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பதுளை மாவட்டத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து கேகாலை மாவட்டத்தில் 09 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 12 பேரும், நுவரெலியாவில் 6 பேரும்,

குருநாகல் மாவட்டத்தில் 7 பேரும், யாழில் ஒருவரும், அநுராதபுரத்தில் ஒருவரும், அம்பாறையில் 08பேரும், மொனராகலை மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.