;
Athirady Tamil News

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டிரம்பின் அதிரடி நடவடிக்கை

0

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டு குடிமக்களிடமிருந்து நிலங்கள் சட்டவிரோதமாக பறிக்கப்படுகின்றன என்றும், அவர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டின் காரணமாக ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணித்தது.

மேலும், அடுத்த ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் மியாமி நகரில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டிற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு அழைப்பு வழங்கப்படாது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

டிரம்ப் முன்வைத்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசா முற்றாக மறுத்துள்ளார்.

நிலம் பறிமுதல் அல்லது இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என அவர் வலியுறுத்தினார்.

இந்த பதற்றமான சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள் மற்றும் சலுகைகளை ரத்து செய்வதாக டிரம்ப் தற்போது அறிவித்திருக்கிறார்.

இதனால் இரு நாடுகளின் உறவிலும் மேலும் பதற்றம் நிலவும் சூழல் உருவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.