;
Athirady Tamil News

முதல்முறை! சௌதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மது விற்பனை! ஒரே கண்டீஷன்?

0

மது விற்பனையில் கடும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வரும் சௌதி அரேபியாவில், தற்போது அந்த விதிகளில் சற்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவில் வாழும் வெளிநாட்டு, முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் மது விற்பனை செய்யும் வகையில் விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, ரியாத்தில், சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் மதுபானக் கடை துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தற்போது சௌதி அரேபியாவில், புதிய தளர்வு வந்துள்ளது. இதுவரை முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்கு மது விற்பனை இல்லை என்ற விதி தளர்த்தப்பட்ட, சௌதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டினராக, முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலும் மாதம் ரூ.12 லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்பவராக இருந்தால், அவர்களுக்கு ரியாத்தில் உள்ள ஒரே ஒரு மதுபானக் கடையில் மதுபானம் வாங்க அனுமதி கிடைக்கும்.

இதற்காக வருமானச் சான்றிதழை கையிலேயே வைத்துக் கொண்டு இருக்க முடியுமா என கேள்வி எழுப்ப முடியாது. சவூதி அரேபியாவின் எந்தப் பக்கத்தில் இருந்தாலும், ஒரு பியர் வேண்டும் என்றால், வருமானச் சான்றிதழுடன், ரியாத் நகருக்குச் சென்று, அங்குள்ள ஒரே ஒரு மதுபானக் கடையில் சான்றிதழைக் காட்டி மது வாங்கலாம். அதுவும் அவர்கள் ப்ரீமியம் குடியுரிமை வைத்திருந்தால் மட்டுமே சாத்தியம்.

முன்னதாக, இது வெளிநாட்டு தூதர்களுக்காக மட்டுமே திறக்கப்பட்டது. தற்போது படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது.

இன்னமும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாவிட்டாலும், மதுபானக் கடையில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்னும் இரண்டு கடைகளில் சௌதி அரேபியாவில் திறக்கப்படவிருப்பதாகவும், நாட்டின் 2030ஆம் ஆண்டு வளர்ச்சிப் பாதையை நோக்கி அரசு திட்டமிட்டு வருவதால், பல திறமையான தொழில்நுட்ப நிபுணர்கள், சௌதி அரேபியா வருவதை உறுதி செய்வதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த தளர்வுகள் நாட்டின் மீதான மக்களின் பார்வையை மாற்றும் என்றும், தொழில் நிபுணர்களை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.