;
Athirady Tamil News

அரச பேருந்தில் செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

0

நவம்பர் மாதத்திற்கான பயண அட்டையைப் (Season card) பயன்படுத்தி, இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்கும் வசதி பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பயணச் சீட்டு
அதன்படி, கடந்த மாதம் வழங்கப்பட்ட பயணச் சீட்டை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

இதேவேளை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை மீட்டெடுப்பதற்காக நிதி திரட்டும் நோக்கில், ஜனவரி மாதத்தில் ஆசிரியர்கள் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கத் தயாராக இருப்பதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.