வெளிநாட்டு பிரஜைக்கு இலங்கையில் நேர்ந்த அசம்பாவிதம் ; பரிதாபமாக பிரிந்த உயிர்
மாத்தறையில் வெலிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிகம கடலோர வீதியில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விபத்து நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.
சாரதி கைது
மாத்தறையிலிருந்து காலி நோக்கிப் பயணித்த ஜீப் வாகனம் ஒன்று வீதியில் பயணித்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார். விபத்து தொடர்பில் ஜீப் வாகனத்தின் சாரதி வெலிகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.