சிவனொளிபாதமலை சென்ற வெளிநாட்டு பயணிக்கு நேர்ந்த கதி
சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்ய வந்த ஆறு பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (21) மதியம் இடம்பெற்றுள்ளது.
நல்லதண்ணி பகுதியில் அதிக உஷ்ணம் நிலவிவரும் நிலையில் சிவனொளிபாதமலைக்கு செல்லும் வீதியில் ரத்து அம்பலம் பகுதியில் உள்ள குளவி கூடு கலைந்து வெளிநாட்டு பயணி ஒருவரும், உள்நாட்டு யாத்திரிகர்கள் ஐந்து பேர் அடங்கலாக ஆறு பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட ஆறு பேரையும் அவசர ஆம்புலன்ஸ் ஊடாக வைத்திய சாலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.