;
Athirady Tamil News

பணிப் புறக்கணிப்பில் யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள்

0

நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.​​​​​

இன்று(23) காலை 8.00 மணி முதல் 48 மணித்தியால பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப் புறக்கணிப்பு இடம்பெற்றுவருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு இயங்கவில்லை. இதன் காரணமான தொலை தூரங்களிலிருந்து வருகைதந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்புச் சென்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.