;
Athirady Tamil News

ஷிரந்தி ராஜபக்ஷவிடம் 4 மணித்தியாலங்களுக்கும் மேல் வாக்குமூலம்!

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார்.

முன்னெடுக்கப்பட்டு வரும் பல விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, ஷிரந்தி ராஜபக்ஷ இன்றைய தினம் (03) காலை 9.30 மணியளவில் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வருகை தந்திருந்தார்.

நிதி மோசடிகள்
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், ஷிரந்தி ராஜபக்ஷ மேலும் இருவருடன் இணைந்து கூட்டு வங்கிக் கணக்காகப் பேணி வந்த “சிறிலிய” (Siriliya) கணக்கின் ஊடாக இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்காகவே ஷிரந்தி ராஜபக்ஷ இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

ஷிரந்தி ராஜபக்ஷ கடந்த ஜனவரி 27ஆம் திகதியும் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்தார். எனினும் அன்றைய தினம் அவர் சமூகமளிக்கவில்லை என்பதுடன் வேறொரு தினத்தைக் கோரியிருந்தார்.

அதற்கமையவே அவர் இன்றைய தினம் அழைக்கப்பட்டிருந்தார். அதேவேளை ஷிரந்தி ராஜபக்ஷ பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிலிருந்து வெளியேறிய போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவான பெருமளவிலானோர் அங்கு குழுமியிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.