;
Athirady Tamil News

49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு ; யாழில் இரு கைதிகள் விடுதலை

0

சுதந்திர தினத்தையொட்டி இன்று புதன்கிழமை (04) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரி சீனிவாசன் இந்திரகுமார் தலைமையில் குறித்த 2 சிறை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.

49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு
கசிப்பு வழக்கு ஒன்றுக்காக தண்டப்பனம் செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04) சிறையில் உள்ள 49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையில் கைதிகள் கழித்த ஒவ்வொரு வருடத்துக்கும் ஒரு வார கால பொது மன்னிப்பு இதன்கீழ் வழங்கப்படுகிறது.75,000 ரூபாவுக்கு குறைந்த அபராதத்தைச் செலுத்தத் தவறியமையினால் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனைக் காலத்தை இரத்துச் செய்தல் இந்த பொதுமன்னிப்பின் கீழ் இடம்பெறுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.